தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
1 min read
Worker commits suicide by consuming poison
23.4.2026
திருநெல்வேலியை அடுத்த ராமையன்பட்டி, ராஜகோபாலபுரத்தைச் சேர்ந்தவர் சாமிதுரை. இவரது மகன் சங்கர் (19). கூலித் தொழிலாளியான இவர், கடந்த சில நாள்களாக சரிவர வேலைக்கு செல்லாமல் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் சம்பவத்தன்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாராம். உறவினர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து மானூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.