கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் திரும்பத் தர நியூயார்க் மேயர் மம்தானி கோரிக்கை
1 min read
New York Mayor Mamtani demands return of Kohinoor diamond to India
30.4.2026
அமெரிக்காவின் நியூ யார்க் நகரின் முதல் முஸ்லீம் மேயராக கடந்த ஜனவரி 1 அன்று இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி பதவியேற்றார்.
பிரபல திரைப்பட இயக்குனர் மீரா நாயரின் மகனான இவர் இடதுசாரி சித்தாந்தம் கொண்டவர் ஆவார். டிரம்ப்-ஐ கடுமையாக விமர்சித்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட இவருக்கு அமோக ஆதரவு கிடைத்தது.
இந்நிலையில் பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ், ராணி கமீலாவுடன் அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள சூழலில் புதன்கிழமை அன்று பயங்கரவாதிகளின் தாக்குதலில் இறந்தவர்களின் நினைவிடமான 9/11 நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினர். மம்தானியும் அங்கு உடனிருந்தார்.
மன்னரை சந்தித்தபோது தனிப்பட்ட முறையில் பேச வாய்ப்பு கிடைத்திருந்தால் என்ன கேட்டிருப்பீர்கள் என மம்தானியிடம் அன்றைய நாள் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த மம்தானி, அவருடன் தனிப்பட்ட முறையில் பேச எனக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால், கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் திருப்பித் தருமாறு நான் அவரை வலியுறுத்தியிருப்பேன் என்று தெரிவித்தார்.