திருச்செந்தூர் முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.3.95 கோடி
1 min read
Rs. 3.95 crores in bank notes offered at Tiruchendur Murugan Temple
1.5.2026
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக உண்டியல்களில் செலுத்தும் பணம் மாதந்தோறும் எண்ணப்படுகிறது. இந்த நிலையில் கோவில் வளாகத்தில் கடந்த புதன்கிழமை தக்கார் அருள்முருகன் தலைமையில், இணை ஆணையர் ராமு முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
இதில் உதவி ஆணையர் மெய்வேல், தூத்துக்குடி உதவி ஆணையர் ராம சுப்பிரமணியன், கண்காணிப்பாளர் ரோகிணி, ஆய்வர் செந்தில்நாயகி, தக்காரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ்பாண்டியன், பொதுமக்கள் பிரதிநிதிகள் சுப்பிரமணியன், மோகன், கருப்பன் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இந்த உண்டியல் காணிக்கையில் மொத்தம் ரூ.3 கோடியே 95 லட்சத்து 64 ஆயிரத்து 510 கிடைத்துள்ளது. அதேபோல் 803 கிராம் தங்கமும், 17 கிலோ 765 கிராம் வெள்ளியும், 944 வெளிநாட்டு கரன்சிகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.