August 21, 2026

Seithi Saral

Tamil News Channel

புளியங்குடியில் கழிவு நீர் ஓடையில் விழுந்த தொழிலாளி சாவு

1 min read

Worker dies after falling into sewage stream in Puliyangudi

3.5.2026
தென்காசி மாவட்டம் புளியங்குடி டி.என்.புதுக் குடி விநாயகர் கோவில் தெற்கு தெருவை சேர்ந்த வர் பரமசிவன் மகன் ஆவுடை நாயகம் (வயது 50). கூலித் தொழிலாளியான இவர் கடந்த 28ந் தேதி காலை அங்குள்ள பள்ளிவாசல் கார் பார்க்கிங் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அங்குள்ள கழிவுநீர் ஓடைக்குள் கால்தவறி விழுந்துள்ளார்.
இதில் ஆவுடைநாயகத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட் டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஆவுடைநாயகம் பரிதாபமாக இறந் தார்.

இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வரு கின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *