ஓஹியோவில் ராமசாமி ராஜ்ஜியம்: அமெரிக்க தேர்தலில் ஜொலித்த இந்தியர்
1 min read
Ramasamy’s kingdom in Ohio: An Indian who shone in the US elections
7/5/2026
அமெரிக்காவின் ஓஹியோ மாகாண கவர்னர் தேர்தலில் போட்டியிட நடந்த ‘பிரைமரி’ தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் விவேக் ராமசாமி அமோக வெற்றி பெற்றுள்ளார்.
அமெரிக்க அரசியலில் இந்திய வம்சாவளியினரின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அந்த வரிசையில், ஓஹியோ மாகாண கவர்னர் பதவிக்கான குடியரசுக் கட்சி வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் ‘பிரைமரி’ தேர்தலில், விவேக் ராமசாமி எதிராளிகளை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளார்.
கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட விவேக் ராமசாமி, அதிபர் டொனால்டு டிரம்பின் அமைச்சரவையில் அரசுத் திறன் மேம்பாட்டுத் துறையில் தலைவராகப் பணியாற்றியவர்.
டிரம்பின் தீவிர ஆதரவாளரான விவேக், ஆரம்பம் முதலே கவர்னர் வேட்பாளருக்கான தேர்தலில் முன்னிலையில் இருந்தார்.
ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே, அவர் 82 சதவீதத்திற்கும் அதிகமான ஓட்டுகளைப் பெற்று, சக போட்டியாளரான கார் வடிவமைப்பாளர் கேசி புட்ச் என்பவரை மண்ணைக் கவ்வ வைத்தார்.
இதன் மூலம், நவம்பரில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் விவேக், ஜனநாயகக் கட்சி வேட்பாளரான டாக்டர் ஆமி ஆக்டனை எதிர்கொள்ள உள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளாக ஓஹியோ மாகாணத்தில் குடியரசு கட்சியினரே கவர்னராக தேர்ந்தெடுக்கப்பட்டதால், அவருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.