தெலுங்கானாவில் மத்திய அமைச்சர் மகன் மீது போக்சோ வழக்கு பதிவு
1 min read
POCSO case registered against Union minister’s son in Telangana
9.5.2026
தெலுங்கானாவைச்சோ்ந்த மத்திய மந்திரி பண்டி சஞ்சய் குமார். உள்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்து வருகிறார். இவர் தெலுங்கானாவின் கரீம்நகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவருடைய மகன் பகீரத். மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
17 வயது சிறுமியின் தாய் அளித்த புகாரின்படி, அமைச்சரின் மகன் பகீரத், அந்தச் சிறுமியுடன் பழகி வந்ததோடு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் ஏழு முதல் எட்டு மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கிடையேயான பழக்கம் தொடங்கியதாகக் போலீஸார் கூறினர். மாணவியான அந்த சிறுமி, விசாரணையின் ஒரு பகுதியாக இன்னும் பரிசோதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து பண்டி சஞ்சயின் மகன் மீது ஹைதராபாத் போலீஸ் போக்சோ வழக்கு பதிவு செய்தது. இதற்கிடையில், சிறுமி மற்றும் அவரது பெற்றோர் தன்னை மிரட்டி பணம் பறிக்க முயல்வதாக கரீம்நகர் காவல் நிலையத்தில் பகீரத் தனியாக ஒரு புகார் அளித்துள்ளார்.
புகாரில், சிறுமியை திருமணம் செய்துகொள்ளுமாறு அவரது பெற்றோர் வற்புறுத்தியதாகவும், தான் மறுத்ததால் பொய் வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டி பணம் கேட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அவரது புகாரின் அடிப்படையிலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தெலங்கானா அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.