பஞ்சாபில் அமைச்சர் சஞ்சீவ் அரோரா கைது
1 min read
Punjab Minister Sanjeev Arora arrested
9.5.2026
பஞ்சாப் தொழில்துறை அமைச்சர் சஞ்சீவ் அரோரா அமலாக்கத்துறை இன்று (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டார்.
பஞ்சாபில் பண முறைகேட்டு வழக்கில் விசாரணையைத் தொடங்கியுள்ள அமலாக்கத் துறை அம்மாநில அமைச்சர் அரோராவுக்கு (62) இந்த வழக்கில் தொடர்பு உள்ளதாக குற்றஞ்சாட்டி அவருக்கு தொடர்புடைய இடங்களில் விசாரணையில் ஈடுபட்டது.
வெவ்வேறு நிறுவனங்களுக்குச் சாதகமாக சுமார் ரூ. 100 கோடி வரை பண முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக அரோரா மீது குற்றச்சாட்டு உள்ளது. அமலாக்கத் துறை விசாரணைக்கு அரோரா ஒத்துழைக்கவில்லை என்பதால் அவர் பிஎம்எல்ஏ சட்டத்தின்கீழ், கைது செய்யப்பட்டார் என்று எதிகாரிகள் தெரிவித்தனர்.