விருதுநகர் மாவட்டத்தில் 10 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து
1 min read
Licenses of 10 firecracker factories in Virudhunagar district temporarily cancelled
10.5.2026
விருதுநகர் மாவட்டத்தில் உரிய பாதுகாப்பு விதிகளை மீறிச் செயல்பட்ட 10 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தொழிற்சாலைகள் பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 220 பட்டாசு ஆலைகளில் கடந்த ஏப்ரல் மாதம் ஆய்வு மேற்கொண்டதில் விதியை மீறிச் செயல்பட்ட 30 ஆலைகளுக்கு குறிப்பாணை வழங்கப்பட்டது.
மேலும், அதிகளவில் மருந்து இருப்பு வைத்தல் உள்ளிட்ட காரணங்களால் 10 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. விபத்தைத் தவிர்க்க பட்டாசு ஆலை உரிமையாளர்கள், ஆலை போர்மென்கள், தொழிலாளர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.