June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

மனித உரிமைகள் குறித்த குறும்பட போட்டி; ரூ.2 லட்சம் வரை பரிசு

1 min read

Short film competition on human rights; Prizes up to Rs. 2 lakh

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் விஜூ மகாஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) மனித உரிமைகள் குறித்த போட்டியினை 2015-ம் ஆண்டு நிறுவி அதன் 12வது பதிப்பான 2026-ம் ஆண்டுக்கான குறும்பட போட்டிகளை நடத்துகிறது. இதற்கு நாட்டின் குடிமக்களாகிய எந்த வயதினரும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது. இந்த போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த குறும்படங்களுக்கு முதல் மூன்று பரிசுத்தொகை முறையே ரூ.2 லட்சம், ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் ரூ.1 லட்சம் ஆகும்.

மேலும், ஆணைக்குழு மூன்று ரொக்க விருதுகள் சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளுடன் நடுவர் குழு பரிந்துரைத்தால் அதிகபட்சமாக 4 படங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசோடு சிறப்பு குறிப்பு சான்றிதழ் (Certificate of Special Mention) வழங்குவதற்கு ஆணையம் பரிசீலனை செய்யும். மேலும், குறும்படங்கள் எந்த இந்திய மொழிகளிலும், ஆங்கிலம் துணை தலைப்புகளுடன் இருக்கலாம். குறும்பட கால அளவு குறைந்த பட்சம் 3 நிமிடங்கள்; அதிக பட்சம் 10 நிமிடங்களாக இருக்கலாம்.

பதிவுகளை அனுப்புவதற்கு கூகுள் டிரைவினை பயன்படுத்தி ஆன்லைனில் [email protected] என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டிய கடைசி நாள் 30.6.2026 ஆகும். இப்போட்டி தொடர்பான விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் விண்ணப்ப படிவ நகல் NHRC இணையதளத்திலிருந்தோ (https://nhrc.nic.in) அல்லது பின்வரும் இணைப்பிலிருந்தோ (https://nhrc.nic.in/flipbook/files/255) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது இந்திய குடிமக்களை மையமாக கொண்ட மனித உரிமைகள், கலாச்சாரம் மற்றும் உணர்திறனை ஏற்படுத்தும் முயற்சிக்காக நடத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *