அதிமுக கொறடா நியமனம் குறித்த மனுக்கள் பரிசீலனை; சபாநாயகர் அறிவிப்பு
1 min read
AIADMK considers petitions regarding appointment of whip; Speaker makes announcement
15.5.2026
சட்டமன்றக்குழு தலைவர்,. அதிமுக கொறடா விவகாரம் நிலுவையில் உள்ளது என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கூறி உள்ளார்.
சட்டசபை தேர்தலில் தோற்றதால் அதிமுகவில் உட்கட்சி மோதல் எழுந்துள்ளது. இபிஎஸ் ஒரு தரப்பாகவும், எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் ஒரு தரப்பாகவும் செயல்பட்டு வருகின்றனர். இரு தரப்பும் சட்டமன்ற குழு தலைவர் பதவியை பிடிக்க முயற்சித்து வருகிறது. இது குறித்து இரண்டு தரப்பினரும் சபாநாயகரிடம் கடிதங்களை கொடுத்துள்ளனர்.
இந் நிலையில், அதிமுகவினர் அளித்துள்ள கடிதங்கள் ஆய்வில் உள்ளன, அவை பரிசீலிக்கப்படும். கடிதங்கள் கொடுத்து 2 நாட்கள் தான் ஆகிறது என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.
அதிமுகவினர் இரண்டு தரப்பாக அணுகி மனு அளித்துள்ளனர். அதிமுக கொறடா நியமான விவகாரம் பரிசீலனையில் உள்ளது. மனுக்கள் அளித்து 2 நாட்கள் தான் ஆகின்றது. பரிசீலித்து முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு ஜேசிடி பிரபாகர் கூறினார்.