June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் மத்திய அரசை கண்டித்து காங். ஆர்ப்பாட்டம்

1 min read

Congress protests in Tenkasi against the central government.

16.5.2026
தென்காசியில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆலங்குளம் எஸ்.செல்வராஜ் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட ஊராட்சியின் துணைத் தலைவர் ஆயிரப்பேரி தி.உதயகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முன்னாள் செங்கோட்டை யூனியன் சேர்மன் சீவநல்லூர் ப.சட்டநாதன், நாகராஜன், மாவட்ட கவுன்சிலர் எஸ்.ஆர். சுப்பிரமணியன், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் சுந்தரையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு எதிர்க்கட்சிகளை ஒடுக்க சிபிஐ பிரவீன் சூட்டுக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பை வழங்கியது மற்றும் நீட் தேர்வை ரத்து செய்து மாநில அரசே தேர்வுகளை நடத்துவதற்கு அனுமதி மறுக்கின்ற மத்திய பாஜக அரசை கண்டித்துகண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த. கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில தொழிலாளர் யூனியன் பொதுச் செயலாளர் செங்கை கண்ணன், சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் வெள்ளப்பாண்டி, மாவட்ட துணைத் தலைவர் சேர்மச் செல்வம், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஏ.ஜி.எம். கணேசன், முகம்மது ரபி, மாவட்ட செயலாளர்கள் பிரபாகர், சுரேஷ், வட்டார தலைவர்கள் குற்றாலம் பெருமாள், செங்கோட்டை கதிரவன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *