கடையம் பகுதிகளில் வளர்ச்சி பணிகள் -கலெக்டர் ஆய்வு
1 min read
Development works in Kadayam Panchayat Union areas – Collector inspects
20.5.2026
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கடாம்பட்டி, கீழக்கடையம், கடையம் பெரும்பத்து, ஐந்தாங்கட்டளை ஆகிய ஊராட்சி பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், ஊரகவளர்ச்சித்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கடையம் பெரும்பத்து கிராமத்தில் ஊரக கட்டடங்கள் பராமரிப்பு மற்றும் ஆசீர்வாதபுரம் பஞ்சாயத்து புனரமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.4.80 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளையும். கீழக்கடையம் ஊராட்சியில் ரூ.6.19 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சிமன்ற அலுவலக கட்டட பணிகளையும்,
ரூ.9.60 இலட்சம் மதிப்பீட்டில் பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பண்ணையினையும், கடையம் பெரும்பத்து ஊராட்சியில் ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகளிர் சுகாதார வளாகத்தினையும், கடையம் பெரும்பத்து ஊராட்சி புங்கம்பட்டி, மயிலப்பபுரம். தேரிக்குடி சாலையில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.55.10 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலைப்பணிகளையும், வெங்கடாம்பட்டி ஊராட்சியில் ரூ.253 இலட்சம் மதிப்பீட்டில் திறந்தவெளி கிணற்றுக்கு மூடி அமைத்தல் மற்றும் சிமெண்ட் தளம் அமைக்கும் பணிகளையும்,
வெங்கடாம்பட்டி ஊராட்சி கோவிலூற்று கிராமத்தில் ஊரக கட்டடங்கள் பராமரிப்பு மற்றும் புனரமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.700 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளையும், நியாய விலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம், எடை மற்றும் மொத்த இருப்பு போன்றவற்றை பார்வையிட்டும். ரூ.1.50 இலட்சம் மதிப்பீட்டில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளையும்,
வெங்கடாம்பட்டி ஊராட்சி பண்டாரகுளம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை றுதித்திட்டத்தின் கீழ் 9.80 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பண்ணையினையும், ஐந்தாங்கட்டளை ஊராட்சியில் கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் திட்டத்தின் கீழ் 7 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணி போன்ற ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர். பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில், கடையம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணேசன்,(கிராம ஊராட்சி), அலிஸ்தாயம்மாள் (வட்டார ஊராட்சி), உதவிப் பொறியாளர்கள் பூச்செண்டு, சந்திரலேகா மற்றும் பணி மேற்பார்வையாளர்கள் முருகன். ஆறுமுகராஜா ஆகியோர் உடனிருந்தனர்.