June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

60 நாட்களில் மிகப்பெரிய நிர்வாக மாற்றம்; ஆதவ் அர்ஜுனா பேட்டி

1 min read

Biggest administrative change in 60 days; Adhav Arjuna interview

22.6.2026
‘பல்வேறு துறைகளில் ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது .60 நாட்களில் ஒட்டுமொத்த நிர்வாக மாற்றத்தை பார்ப்பீர்கள்,’ என்று அமைச்சர் ஆதவ் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
பணபலம் தூக்கியெறியப்பட்டுள்ளது. ஜாதி அடிப்படையில் நடத்தப்பட்ட தேர்தல் அரசியலை மக்கள் தூக்கி எறிந்துள்ளனர். ஜோசப் விஜய் என்று சொல்லி மக்களிடம் ஓட்டு கேட்டு, மத அரசியலை தூக்கி எறிந்துள்ளார் எங்கள் தலைவர். எல்லோருக்குமான முதல்வராக ஒரு முதல்வராக எல்லா மதமும், ஜாதிகளும், இளைஞர்களும், பெண்களும் இணைந்து இந்த வெற்றியை உருவாக்கிய போது, எங்கள் தலைவர் முதல் மாநாட்டில் சொல்லியது போல, அதன் பிறகு என்னுடைய தனிப்பட்ட முழக்கமாக, ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கத்தை, தமிழக வரலாற்றில் இது எல்லாம் சாத்தியமா? என்று எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் குறைத்து மதிப்பிட்டு பார்த்தார்கள்.

தேர்தல் அரசியலில் முதல் மாநாட்டில் என்ன வாக்குறுதி கொடுத்தாரோ, அதுபோல, என்றைக்கும் இந்தியாவில் இல்லாத அமைச்சரவையில் ஒடுக்கப்பட்ட, யார் எல்லாம் கட்சிக்கு உழைத்தார்களோ, இளைஞர்களுக்கான அமைச்சரவையை முதல்வர் உருவாக்கியுள்ளார். இந்தியாவே திரும்பிப் பார்க்கக் கூடிய முன்னுதாரனமான அமைச்சரவை உருவாக்கியுள்ளார்.
108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், ஜனாதிபதி ஆட்சி வந்து விடும் என்ற காரணத்திற்காக, ஜனநாயக ரீதியாக காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவு அளித்தனர். எங்களின் தலைவர் சொன்ன வாக்குறுதிபடி, ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்ற உறுதியை அனைத்து தோழமைக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார்.

ஒவ்வொரு கட்சியும் கலந்து ஆலோசித்து முடிவெடுத்தனர். 59 ஆண்டு கழித்து காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். விசிக 30 ஆண்டு திருமாவளவனின் முழக்கம். ஒரு அதிகாரம் ஒருவரிடம் தான் இருக்க வேண்டுமா? என்று 1999ல் முழக்கம் எழுப்பினார். 1948ல் உருவாக்கப்பட்ட முஸ்லிம் லீக், இன்று வரையிலும் முன்பிருந்த அரசுகள் முஸ்லிம் சகோதரர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து கொடுத்தது கிடையாது. தங்களின் கட்சியில் இருக்கும் முஸ்லிம்களுக்கு பெயரளவில் அதிகாரமில்லாத துறைகளை ஒதுக்கி சமூக நீதியில்லாத அரசை உருவாக்கினர். ஆனால் இன்று உண்மையான சமூக நீதி நாளாக பார்க்கிறோம்.

பதவியேற்புக்கு பிறகு, திருமாவளவன், காதர் மொய்தீனைப் பார்த்து முதல்வர், இன்று தான் அமைச்சரவை முழுமை பெற்றுள்ளது என்று அன்பை பகிர்ந்தார். இன்றைய பொறுத்தவரைக்கு ஈவேரா, அம்பேத்கர் கண்ட சமூக நீதி நாள் இன்றைக்கு தான் முழுமை பெற்றுள்ளது. தேர்தலில் வேலை செய்யும் போது, இவர் இந்த ஜாதி, அவர் இந்த ஜாதி என்று ஊடகங்கள் விவாதிக்கின்றனர்.
மக்கள் ஜாதியின் அடிப்படையில் ஓட்டுப்போடவில்லை. எதிர்க்கட்சிகள் தவறாக பிரசாரம் செய்கிறார்கள். இந்து அறநிலையத்துறையின் அமைச்சர் ரமேஷின் ஜாதி பற்றி எங்களுக்கு தெரியாது. தவெகவை பொறுத்தவரையில் இளைஞர்கள், பெண்கள் தான். ஜாதி அடிப்படையில் தேர்தலை எதிர்கொண்டது கிடையாது. தவெக வெற்றி பெறவே பெறாது என்று குறைத்து மதிப்பிட்டிருந்தனர். ஆனால், தேர்தலில் உழைத்தவர்களுக்கு முதல்வர் விஜய் அனைவருக்கும் துறை ஒதுக்கியுள்ளார்.
தமிழகம் முழுவதும் 11 அல்லது 12 துறைகளில் ஊழல் கடுமையாக இருக்கும். அமைச்சருக்கு ஒரு நிதி செல்லும் போது, அதிகாரிகளும் கேட்பார்கள். ஒரு குடும்பத்திற்கு 15 சதவீதம், 15 சதவீதம் அமைச்சர், அதிகாரிகளுக்கு 7 சதவீதம் என்ற 6 சதவீத வேலையை தூக்கி எறிந்துள்ளோம். நிர்வாக ரீதியாக மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் 10 சதவீதமாக இருந்த சதவீதம் திமுக ஆட்சியில் 12 சதவீதமாக அதிகரிச்சாங்க. இப்போது, முதல்வர் குடும்பத்திற்கு எதுவும் கிடையாது. 60 நாட்களில் ஒட்டுமொத்த நிர்வாக மாற்றத்தை பார்ப்பீர்கள்,
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *