July 10, 2026

Seithi Saral

Tamil News Channel

அ.தி.மு.க.,விலிருந்து தனபால் விலகல்

1 min read


Dhanapal’s departure from AIADMK

22.5.2026
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தொகுதியில் வென்ற லோகேஷ் தமிழ்ச்செல்வன், முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன். அவர் நேற்று அமைச்சராக பதவியேற்றார். தன் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அமைச்சரானதை காண வந்திருந்த தனபால் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
என் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அமைச்சராகியுள்ளார். நான் பல பதவிகளை அனுபவித்தவன். அந்த இடத்திற்கு என் மகன் செல்வதை பார்க்கும் போது, மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் அ.தி.மு.க.,விலிருந்து விலகி, நீண்ட நாட்களாகி விட்டன. உடல்நலம் சரியில்லாததால், வீட்டில் ஓய்வெடுத்து வருகிறேன்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பின், எனக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கவில்லை. அதனால், மனம் நொந்து, அ.தி.மு.க.,விலிருந்து விலகி வந்து விட்டேன். என் மகன், விஜயை நம்பி சென்றார்; அமைச்சராகி விட்டார். தவறு செய்தவர்கள், இப்போது அதன் பலனை அனுபவிக்கின்றனர். எல்லாரையும் புறக்கணித்தனர். இன்று அவர்களை மக்கள் புறக்கணித்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *