August 15, 2026

Seithi Saral

Tamil News Channel

நெல்லை: லாரி மீது ஆம்னி பஸ் மோதியதில் டிரைவர் பலி

1 min read

Nellai: Driver killed after omni bus collides with lorry

1/6/2026

நெல்லை அருகே நான்கு வழிச்சாலையில் லாரி மீது ஆம்னி பஸ் மோதியதில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த ஆம்னி பஸ்ஸில் பயணம் செய்த 20 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

நாகைமாவட்டம் வேளாங் கண்ணியில் இருந்து நேற்று இரவு கேரள மாநிலம்திருவனந்தபுரத்திற்கு ஆம்னி பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சில் சுமார் 40 பயணிகள் இருந்தனர். பஸ்சை திருவாரூரைச் சேர்ந்த முகம்மது கலீல் என்பவரது மகன் முகமது அராபத் (வயது 29) என்பவர் ஓட்டினார். இந்த பஸ் நேற்று அதிகாலையில் நெல்லை புதிய பஸ் நிலையம் அருகில் பயணிகளை இறக்கி விட்டு, கன்னியாகுமரி தான்குவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தது.

நெல்லையை அடுத்த பொன்னாக்குடி பாலம் அரு கில் சென்றபோது, முன்னால் சென்றலாரி மீது எதிர்பாராத விதமாக ஆம்னி பஸ் பயங்கர மாக மோதியது.

இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி அப்பளம் போன்று நொறுங்கியது. பஸ்சின் இடிபாடுகளில் சிக்கிய டிரைவர் முகமது அராபத் பலத்த காயமடைந்தார். மேலும் பஸ்சில் இருந்த பெண்கள் உள்பட 20 பயணி களும் படுகாயமடைந்தனர்.

அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டது.

உடனே பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் காந்த்திகேயன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, பஸ்சின் இடிபாடுகளை அகற்றி மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதில் பலத்த காயமடைந்த முகம்மது அராபத் மற்றும் 20 பயணிகளை மீட்டு சிகிச்சைக் காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்தி ரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி முகம்மது அராபத் பரிதாபமாக இறந் தார்.

மற்ற பயணிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *