June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

த.வெ.க. ஆட்சி நன்றாக இருக்கிறது – அதிமுக லீமாரோஸ் புகழாரம்

1 min read

T.V.K.’s rule is good – AIADMK’s Leemaros praises

1.6.2026
நீதிக்கட்சியின் வைரத்தூண் என்று அழைக்கப்படும் சர். ஏ.டி.பன்னீர்செல்வத்தின் 138-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள மணிமண்டப வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு லால்குடி சட்ட மன்ற உறுப்பினர் லீமா ரோஸ் மார்ட்டின் தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் லீமாரோஸ் எம். எல்.ஏ. செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நன்றாக இருக்கிறது. சிலபேர் தேவையில்வாத வகையில் வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டு இருக்கிறார்கள். பழ.கருப்பையா இஷ்டத்துக்கு பேசி வருகிறார். அவர் என்ன ஜி.எஸ். டி வரியை நாட்டுக்கு கட்டியிருக்கிறார். என்ன தொழில் செய்கிறார் என பட்டியல் போட்டு சொல்ல சொல்லுங்கள்.

சி.எஸ்.ஆர். நிதியில் மக்களுக்கு எத்தனை கோடி மற்றும் அவரது சொந்த திதியில் எத்தனை கோடி செலவு செய்தார் என்பதை ஆதாரத்துடன் சொல்லட்டும். ஆண்டவன் வாயைப் படைத்தான் என்பதற்காக, வாய்க்கு வந்தபடி பேசக் கூடாது. சட்டப்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம். இன்றைய தினம் சட்டமன்ற தொகுதியில் நன்றி அறிவிப்பு செய்வதாக இருந்தது. அதிமு.க. தொண்டர் இறந்ததால் இன்றைய தினம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக. த.வெ.க.வை விமர்சனம் செய்துவரும் நிலையில், லீமா ரோஸ் எம்.எல்.ஏ. பாராட்டி இருப்பது அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *