June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

சென்னையில் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு

1 min read

Annamalai receives enthusiastic welcome in Chennai

5/6/2026
சென்னை வந்திறங்கிய அண்ணாமலைக்கு விமான நிலையத்தில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பாஜகவில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக டில்லி சென்ற அண்ணாமலை தமது ராஜினாமா கடிதத்தை தலைமையிடம் அளித்தார். அவரது முடிவை பாஜ ஏற்றுக் கொண்டு, அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்தது. அதன் பின்னர் தமது விலகல் முடிவை சமூக வலைத்தளங்கள் வாயிலாக வெளியிட்ட அண்ணாமலை, இது நம்ம இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கி உள்ளதாக அறிவித்தார்.

அவரது இயக்கத்தில் லட்சக்கணக்கானோர் இணைந்து கொண்டு வரும் அதே சூழலில் டெல்லியில் 5 நாட்கள் முகாமிட்டு இருந்த அண்ணாமலை சென்னை திரும்பினார். அவரின் பயண விவரத்தை அறிந்த ஆதரவாளர்கள் சென்னை விமான நிலையத்தில் குவிந்தனர். அவர்கள் அண்ணாமலையை உற்சாகமாக வரவேற்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *