இந்தியா கூட்டணி கூட்டத்தை தி.மு.க, ஆம் ஆத்மி புறக்கணிப்பு
1 min read
DMK, AAP boycott India alliance meeting
8.6.2026
இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில கட்சிகளுக்கிடையேயான கருத்து வேறுபாடுகளை சரிசெய்வது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
சமீபத்திய தேர்தல்களில் மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் தமிழ்நாட்டில் தி.மு.க. தோல்வியை சந்தித்தது. தமிழ்நாட்டில் கூட்டணி மாறியதால், இந்தியா கூட்டணியில் பங்கேற்பதை திமுக தவிர்த்துள்ளது. ஆம் ஆத்மியும் பங்கேற்கவில்லை. இந்தக் கூட்டத்தில் மொத்தம் 23 அரசியல் கட்சிகள் பங்கேற்றுள்ளன. மேலும், பாரதிய ஜனதா கட்சியை எதிர்கொள்வதற்கான புதிய அரசியல் உத்திகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்தியாவின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது.
மத்திய அரசு ஜனநாயக விரோத போக்கை கடைப்பிடித்து வருவது, மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள தவெகவிற்கு அழைப்பு விடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ள கட்சிக்கு மட்டுமே இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.