June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

மாமியாரை கரம்பிடித்த மருமகன்

1 min read

The son-in-law who held his mother-in-law’s hand

8.6.2026
உத்தரப்பிரதேசத்தில் மாமியாரை மருமகன் திருமணம் செய்து பதிவு செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி பேசுபொருளாகி வருகிறது. கான்பூரில் மாமியாருடன் 4 ஆண்டுகளாக ரகசிய காதலில் இருந்த மருமகன், இதற்கு மேலும் மறைக்க முடியாது என முடிவெடுத்து, மனைவியை பிரிந்து மாமியாரை முறைப்படி திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், கழுத்தில் தாலியுடன் கையில் திருமண சான்றிதழையும் வைத்து ஜோடியாக வெளியிட்ட வீடியோவை பார்த்து குடும்பத்தினர் பேரதிர்ச்சி அடைந்தனர். இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக குடும்பத்தினர் தரப்பில் இருந்தோ எந்தவொரு புகாரோ மற்றும் காவல்துறை நடவடிக்கையோ இதுவரை பதிவாகவில்லை. இதனால் இச்சம்பவம் உண்மைதானா என்று பயனர்களில் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *