June 22, 2026

Seithi Saral

Tamil News Channel

கர்நாடகாவில் காங். பேரணியால் நீட் தேர்வை தவறவிட்ட 3 மாணவிகள்-கண்ணீர்

1 min read

Three students in Karnataka miss NEET exam due to Congress rally – left in tears

21.6.2026
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் நேற்று நடைபெற்று முடிந்த நீட் மறுதேர்வை எழுதவிருந்த மூன்று மாணவிகள், இரண்டு நிமிடங்கள் தாமதமாக வந்ததால் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. இதனால் தேர்வு மையத்தின் வாசலிலேயே அவர்கள் கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் உள்ள ஆர்.சி.அரசு கல்லூரி மையத்திற்கு 1.30க்கு பதில் 1.32க்கு வந்ததால் மூவரும் தேர்வு எழுத அனுமதிக்கபடவில்லை. பெங்களூரு பேலஸ் மைதானத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பேரணி மற்றும் மாநாட்டால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலே இந்த தாமதத்திற்கு காரணம் என மாணவிகளின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நீட் வினாத்தாள் கசிவுக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து மே.3 அன்று நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து மறுதேர்வு நேற்று நடைபெற்றது. மொத்தம் 5451 மையங்களில், தேர்வு நடந்து முடிந்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *