June 22, 2026

Seithi Saral

Tamil News Channel

முதல்-அமைச்சர் விஜய்க்கு ராகுல்காந்தி பிறந்தநாள் வாழ்த்து

1 min read

Rahul Gandhi extends birthday wishes to Chief Minister Vijay.

22.6.2026
சினிமாவில் உச்ச நடிகராக இருந்து, அரசியலிலும் பெரும் புரட்சியை ஏற்படுத்தி, தற்போது தமிழக முதல்-அமைச்சர் நாற்காலியை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார் விஜய். அவர் இன்று தனது 52-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய்க்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராகுல்காந்தி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், உங்கள் முயற்சிகள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன். தமிழ் மக்களின் உரிமைகள், கண்ணியத்தை பாதுகாப்பதிலும், மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து செயல்படுவதிலும் நான் உங்களுடன் துணை நிற்கிறேன்.” என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *