August 15, 2026

Seithi Saral

Tamil News Channel

குன்னூரில் ரூ.15 கோடியில் கார் பார்க்கிங் கட்டும் பணி ரத்து

1 min read

Police Inspectors Transferred in Tenkasi District

23.6.2026
குன்னூர் விநாயகர் கோயிலுக்கு ரூ.10 முதல் ரூ.15 கோடி கோயில் நிதியில் மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்கும் முந்தை திமுக அரசு திட்டமிட்டது. ஆனால், சராசரியாக மாதத்திற்கு வெறும் 500 பக்தர்கள் மட்டுமே வந்து செல்லும் விநாயகர் கோவிலில், இவ்வளவு பெரிய தொகையில் கார் பார்க்கிங் அமைப்பது தேவையற்றது என அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் சட்டசபையில் தெரிவித்தார்.

இதற்கு முன்னாள் அறநிலையத்துறை அமைச்சரான சேகர்பாபு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், நலிவடைந்த திருக்கோவில்களின் நிலையை மேம்படுத்துவதற்கும், பக்தர்களின் அடிப்படை வசதிகளை செய்வதற்கும், வருவாயை பெருக்குவதற்காகவும்தான் கார்பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டதாக அவர் விளக்கம் அளித்தார்.

கார் பார்க்கிங் அமைப்பது குறித்து சட்டசபையில் முன்னாள், இந்நாள் அறநிலையத்துறை அமைச்சர்களிடையே காரசார விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில், குன்னூரில் ரூ.15 கோடியில் கார் பார்க்கிங் கட்டும் பணி ரத்து செய்யப்படுவதாக அறநிலையத்துறை அறிவித்துள்ளது. அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவின் பேரில் கட்டுமான பணியை இந்து சமய அறநிலையத்துறை நிறுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *