மத்திய சிறுபான்மையினர் துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் ராஜினாமா
1 min read
Union Minister of State for Minority Affairs George Kurian resigns!
23/6/2026
மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஜனாதிபதி திரௌபதி முர்மு, ஜார்ஜ் குரியனின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரான குரியனின் பதவிக்காலம் ஜூன் 21 அன்று முடிவடைந்தது.
இதன் விளைவாக, அவர் சிறுபான்மையினர் விவகாரங்கள் மற்றும் மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளம் ஆகிய துறைகளின் மத்திய இணை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட 65 வயதான ஜார்ஜ் குரியன் பாஜகவில் 1980 முதல் இருந்து வரும் மூத்த தலைவர் ஆவார். கேரளாவில் பாஜகவின் கிருஸ்துவ முகமாகவும் குரியன் திகழ்கிறார்.
கடந்த 2024 ஆகஸ்டில் மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து ராஜ்யசபா எம்.பியாக குரியன் தேர்வாகியிருந்தார்.
சமீபத்தில் நடந்த கேரள மாநில சட்டமன்றத் தேர்தலில் கேரளாவின் கஞ்சிரப்பள்ளி தொகுதியில் போட்டியிட்ட ஜார்ஜ் குரியன் வெற்றி பெறத் தவறியதால், அவருக்கு மீண்டும் ராஜ்யசபா எம்பி சீட் வழங்க கட்சித் தலைமை மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.