ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 11 இந்திய கப்பல்கள்
1 min read
11 Indian ships safely crossed the Strait of Hormuz.
24.6.2026
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தற்காலிக அமைதி ஒப்பந்தம் கையெ ழுத்தானது. மேலும் நிரந்தர அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள இருதரப்பும் 60 நாட்களுக்கு காலக்கெடு நிர்ணயித்து ஆராய்ந்து வருகிறது. இந்தநிலை யில் தற்காலிக ஒப்பந்தம் கையெழுத்துக்கு பிறகு ஹார்முஸ் நீரிணையை 11 வணிகக் கப்பல்கள் வெற்றிக்கரமாக கடந்து இந்தியா நோக்கி விரைந்துள்ளது.
இதனை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஊடக செய் தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், டெல்லியில் நடைபெற்ற செய்தியா ளர் சந்திப்பில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார்.
2 லட்சத்து 85 ஆயிரம் டன் கச்சா எண்ணெய்யுடன் 3 இந்திய கொடி ஏந்திய கச்சா எண்ணெய் கப்பல்கள், எண்ணெய், கியாஸ் மற்றும் உரம் பாரத்துடன் கூடிய பிற நாடுகளை சேர்ந்த கப்பல்களும் இந்தியா நோக்கி வருவதாக தெரிவித்தார்.
பாரசீக வளைகுடாவில் இந்தியாவுக்கு வரவுள்ள மேலும் 12 கப்பல்கள் தற்போது அங்கு பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரி விக்கப்பட்டது.