ஆலங்குளம் அருகே வழிப்பறித் திருடர்கள் மூன்று பேர் கைது
1 min read
Three highway robbers arrested near Alangulam.
24.6.2026
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர்களை போலீசார் கைது செய்தனர்.
ஆலங்குளம் அருகேயுள்ள வடக்கு கல்லத்திகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிமுத்தையா என்பவரது மகன் தங்கராஜ் (வயது 33). மாறாந்தையில் இருந்து கல்லத்திகுளம் நோக்கி தனது பைக்கில் சென்று கொண்டிருந்த போது, அவ்வழியே வந்த 3 நபர்கள் தங்கராஜை வழிமறித்துத் தாக்கி, கைப்பசேி, பைக்கைப் பறித்துத் தப்ப முயன்றனாரம். தங்கராஜ் சத்தமிடவே அருகில் நின்றவர்கள் வந்து மூவரையும் மடக்கிப் பிடித்து, ஆலங்குளம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர்.
போலீஸார் விரைந்து வந்து விசாரணை செய்த போது, அந்த நபர்கள் மானூர் அருகேயுள்ள உக்கிரன்கோட்டையைச் சேரந்த பரமேஸ்வரன் என்பவரது மகன் ஆதிசேஷன்(வயது 27), புதிய செல்வன் என்பவரது மகன் ராம்நாத் (வயது 29), செல்வரத்தினம் மகன் ராஜேஷ் குமார் (வயது 29) என்பதும் ஆடம்பர வாழக்கைக்காக வழிப்பறி செய்ததும் தெரிய வந்தது.
இதையடுதது மூவரையும் கைது செய்த போலீஸார், அவர்களை ஆலங்குளம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.