June 24, 2026

Seithi Saral

Tamil News Channel

பாவூர்சத்திரம் அருகே அரசு பஸ்சில் புகையிலை கடத்திய கண்டக்டர் உள்பட 3 பேர் கைது

1 min read


Three people, including a bus conductor, arrested for smuggling tobacco on a government bus near Pavoorchatram.

24.6.2026

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் வேல்கனி, உதவி ஆய்வாளர் ராஜேஷ் குமார் மற்றும் போலீசார் பாவூர்சத்திரம் அருகே நெல்லை-தென்காசி மெயின் ரோடு சின்னதம்பிநாடார்பட்டி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

இதில் அவர்கள் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த வெற்றிவேல் என்பவரது மகன் முத்துப் பாண்டி (வயது 46), மீனாட்சிபுரம் வேதக்கோவில் தெருவை சேர்ந்த சந்தோஷ் பால் என்பவரது மகன் பொன்னுத்துரை (வயது 43) மற்றும் திப்பணம்பட்டி மெயின்
ரோடு பகுதியை சேர்ந்த
ராமச்சந்திரன் என்பவரது மகன் தனவேல் (வயது 46) என்பது தெரிய வந்தது.

மேலும், இவர்கள் புகையிலை பொருட்களை விற்பதற்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதில் கைதான முத்துபாண்டி தமிழ்நாடு அரசு விரைவு பஸ் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவர் வெளியூர்
பஸ்களுக்கு பணிக்கு செல்லும் போது அரசு பஸ்சில் புகை யிலை பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *