June 26, 2026

Seithi Saral

Tamil News Channel

புளியரை சோதனை சாவடியில் கணக்கில் வராத ரூ.1 95 லட்சம் பறிமுதல்

1 min read

Rs 1.95 lakh in unaccounted cash seized at Puliyara check-post.

26.6.2026

தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடியில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் மோட்டார் வாகன இன்ஸ்பெக்டரிடம் கணக்கில் வராத ரூ.1.95 லட்சம் பறிமுதல் செய்தனர் .

தமிழகம் முழுவதும் அரசு வருவாய் துறைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் உத்தரவுப்படி கடந்த 4ம் தேதி முதல் சோதனை நடத்தப்பட்டு அதிகாரிகளிடம் இருந்து கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தென்காசி மாவட்டம் புளியரை போக்குவரத்து துறை சோதனை சாவடியில் அதிகளவில் வாகன ஓட்டிகளிடம் இருந்து வாகனத்தில் அதிக சுமை உள்ளிட்ட காரணங்களை காட்டி பணம் பறிப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் வந்தது.

இதையடுத்து, இன்று அதிகாலை தென்காசி மாவட்டம் புளியரை போக்குவரத்து துறை சோதனை சாவடியில் தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தலைமையில் சோதனை நடந்தது. இந்த சோதனையில், மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் குமாரிடம் கணக்கில் வராத ரூ.1.60 லட்சம் பணம், மற்றும் அவரது உதவியாளர் கீதாவிடம் இருந்து கணக்கில் வராத ரூ.35,150 பணம் சிக்கியது. பணத்திற்கான காரணத்தை இருவரும் தெரிவிக்காததால் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளால் ரூ.1,95,150 பணம் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *