ஆழ்வார்குறிச்சி அருகே பேராசிரியர் வீட்டில் நகை திருடிய 3 பேர் கைது
1 min read
Three arrested for stealing jewelry from a professor’s house near Alwarkurichi
26.5.2026
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள செட்டிகுளத்தைச் சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன் (வயது 40). கல்லூரி பேராசிரியரான இவர் கடந்த மே மாதம் 16-ந் தேதி மாலை வீட்டிலிருந்து வெளியில் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பியுள்ளார். மறுநாள் பார்க்கும்போது அவரது வீட்டில் உள்ள அலமாரியில் வைத்தி திருந்த சுமார் 12 பவுன் தங்க நகைகளை எடுக்க அலமாரியை பதிறந்தபோது அதில் இருந்த நகைகளைக் காணவில்லை
இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி காவல்நிலையத்தில் ராம – சுப்பிரமணியன் புகாரளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிய மர்ம நபர்களை தேடி வந்தனர்.
விசாரணையில் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள தெற்குப்பாப்பான்குளம் வேதக்கோவில் தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரது மகன் ஜெயக்குமார் என்ற விஜய் (வயது 30), புளியங்குடி அருகே உள்ள டி.என். புதுக்குடி வேதக் கோவில் தெருவைச் சேர்ந்த சந்திரன் என்பவரது மகன் நவீன் அந்தோணி ராஜா (வயது 29) மற்றும் வடமலைசமுத்திரம் கருத்தப்பிள்ளையூரை சேர்ந்த மாசிலாமணி என்பவரது மகன் மரிய சுஜி (வயது 32) ஆகிய மூன்று பேரும் பேராசிரியர் ராமசுப்பிரமணியன் வீடு புகுந்து நகைகளை திருடியது தெரிய வந்தது.
இதையடுத்து ஜெயக்குமார், நவீன் அந்தோணிராஜா, மரிய சுஜி ஆகிய 3 பேரையும் ஆழ்வார்குறிச்சி போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 107 கிராம் தங்கம் மற்றும் 132 கிராம் வெள்ளி நகைகளை பறிமுதல் செய்தனர்.