June 27, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம்.

1 min read

Meeting of the Tenkasi District Development Coordination and Monitoring Committee.

27.6.2026
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் கலை கதிரவன் (தென்காசி) வழக்கறிஞர் ஈராஜா (வாசுதேவநல்லூர்)
, டாக்டர் திலீபன் ஜெயசங்கர் (சங்கரன்கோவில்) ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் (DISHA) மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பின்னர் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் தெரிவிக்கையில்,

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் கீழ் சமூக பாதுகாப்புத்திட்டத்தில் வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை குறித்தும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் அந்தியோதனா, அந்நயோஜனா திட்ட அட்டைகள் குறித்தும், குடும்ப அட்டைகளின் பயனாளிகள் குறித்தும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பிரதம மந்திரி ஜன் விகாஷ் திட்டத்தில் பயன்பெற்ற பயனாளிகள் குறித்தும், புவியியல் மற்றும் சுரங்கத்துறையில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் குறித்தும், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் தேசிய நகர்ப்புற சுகாதார குழுமத்தில் 15 வது நிதிக்குழு திட்டம் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம். கவனம் சார்ந்த வட்டார வளர்ச்சித்திட்டம், ஜனதி சுரக்ஷா திட்டத்தில் பயன் பெற்ற

பயனாளிகள் குறித்தும். JSSK திட்டத்தில் பயன்பெற்ற பயனாளிகள் குறித்தும், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி திட்டத்தில் பயன்பெற்ற பயனாளிகள் குறித்தும். RBSK பிறவிக்குறைபாடுடன் பிறந்த குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் திட்டத்தில் பயனடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்தும். கண்ணொளி காப்போம் திட்டம் குறித்தும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்தும், நீர்வளத்துறை (சிற்றாறு. மேல்வைப்பாறு வடிநிலக்கோட்டம்) திட்டப்பணிகள் குறித்தும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தூய்மை பாரத இயக்கம்-II பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டம், ஜல் ஜீவன் திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் வளர்ச்சித்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்தும்,

தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் புதிய சுய உதவிக் குழுக்கள் அமைத்தல், சுய உதவிக்குழுக்களுக்கு ஆதார நிதி விடுவித்தல். வங்கிக்கடன் இணைப்பு, சமுதாய முதலீட்டு நிதி போன்ற திட்டப்பணிகள் குறித்தும், வனத்துறை சார்பில் பசுமைத்தமிழக இயக்கம், நெல்லை வன உயிரின சரணாலய பணிகள், மத்திய மாநில பங்களிப்பு யானைகள், புலிகள் திட்டப்பணிகள், தீ தடுப்பு வேளாண்மைத்திட்டம். அகஸ்தியர் மலை, உயிர்க்கோள காப்பக திட்டம், தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு பசுமையாக்குதல் திட்டம். தமிழ்நாடு ஈடு செய்யும் காடு வளர்ப்பு திட்டம், சிறப்பு பகுதி மேம்பாடு திட்டம், தலையணையில் சூழல் சுற்றுலா ஏற்படுத்துதல், மரகத பூஞ்சோலை திட்டம், யானை புகா அகழி மற்றும் சோலார் மின்வேலி அமைக்கும் திட்டம், வனக்கோட்டத்தில் மனிதவன உயிரின மோதல் தடுப்பு பணிகள் திட்ட போன்ற திட்டப்பணிகள் குறித்தும்.

பொதுப்பணித்துறை கட்டட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் குறித்தும், ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்தும், பட்டு வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், தோட்டக்கலைத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டுவரும் பணிகள் குறித்தும், கால்நடை பராமரிப்புத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டுவரும் பணிகள் குறித்தும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் பணிகள் குறித்தும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டப்பணிகள் குறித்தும்,
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டத்தில் பயன்பெற்ற பயனாளிகள் குறித்தும், திருமண நிதியுதவித் திட்டங்கள். பெண்குழந்தைகளை காப்போம். பெண்குழந்தைகளுக்கு கற்பிப்போம். புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டப்பணிகள் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு தையல் இயந்திரங்கள் வழங்கும் திட்டம். மிஷன் சக்தி சங்கல்ப் திட்டம், மாவட்ட மகளிர் அதிகார மையங்கள். ஒருங்கிணைந்த சேவை மையம் போன்ற திட்டப்பணிகள் குறித்தும், சகி

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் திட்ட முன்னேற்ற அறிக்கை, செயல்படுத்தப்படும் நலத்திட்ட உதவிகளின் விவரங்கள் குறித்தும், பள்ளிக் கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தீன்தயாள் உபாத்யா கிராம் ஜோதி யோஜனா திட்டப்பணிகள். ஒருங்கிணைக்கப்பட்ட மின் மேம்பாட்டு திட்டம், திருநெல்வேலி தென்காசி தேசிய நெடுஞ்சாலை கோட்டத்தின் கீழ் திட்டப்பணிகள்குறித்தும், நெடுஞ்சாலைத்துறை மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டப்பணிகள் குறித்தும், தமிழ்நாடு சாலை மேம்பாடு -II திட்டப்பணிகள் குறித்தும், திருநெல்வேலி-செங்கோட்டை கொல்லம் சாலை திட்டப்பணிகள் குறித்தும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டப்பணிகள் குறித்தும், மாவட்ட தொழில் மையம் சார்பில் பிரதம மந்திரியின் வேலை உருவாக்கும் திட்டம், பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் முறைப்படுத்தும் திட்டப்பணிகள் குறித்தும், மாவட்ட வேலைவாய்ப்புத்துறையின் சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டப்பணிகள் குறித்தும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் பயனாளிகள் தாமாகவே வீடுகட்டும் திட்டப்பணிகள் குறித்தும். மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் வேளாண் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், கல்வி, வீடு ஆகியவற்றுக்கு வழங்கப்பட்ட கடனுதவி திட்டம் குறித்தும், மாவட்ட திறன் பயிற்சி மையம் சார்பில் வேலைவாய்ப்பு, திறன் பயிற்சி திட்டப்பணிகள் குறித்தும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் திட்டப்பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, தொடர்ந்து, அனைத்து துறை அலுவலர்களும் மாவட்டத்தில் செயல்படுத்தி வரும் திட்டங்கள் அனைத்தையும் மக்கள் நலன் கருதி விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். நடைபெற்றுவரும் வளர்ச்சிப்பணிகளின் அறிக்கையினை மாதந்தோறும் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, மின்சார வசதி, சாலை வசதி ஆகியவற்றை டிசம்பர் இறுதிக்குள் சரி செய்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதே போல் சேதமடைந்த கழிவு நீர் கால்வாய்களை சீரமைக்க வேண்டும். ஆங்காங்கே தேங்கியுள்ள குப்பைகளை அகற்றுவதையும், மக்கும் குப்பை, மக்கா குப்பை என பிரித்து எடுப்பதையும் அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் DISHA குழு தலைவருமான மருராணிஸ்ரீகுமார் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சு.அசோக்குமார். மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தண்டபாணி மற்றும் அனைத்து துறை அரசு உயர் அலுவலர்கள். உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *