June 28, 2026

Seithi Saral

Tamil News Channel

முத்துமாலைபுரத்தில் சிங்கப்பெண் அதிரப்படையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

1 min read

‘Singappenn’ Special Task Force conducts an awareness program in Muthumaalaipuram.

28.6.2026

தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீதோரணமலை முருகன் கோவில் பரம்பரை அறங்காவலரான மறைந்த கே.ஆதிநாராயணனின் சொந்த ஊரான முத்துமாலைபுரத்தில் அவர் வசித்த குடும்ப வீடானது கிராமப்புற மாணவ, மாணவிகள் படிப்பதற்காக ஆதிநாராயணன்-சந்திரலீலா நினைவு கட்டணமில்லா மாலை நேர படிப்பகமாக செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் முத்துமாலை புரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட சிங்கப்பெண் அதிரப்படை அதிகாரிகளான மாணிக்க செல்வி, சிந்து, பேசியம்மாள் ஆகியோர் இந்த மாலை நேர படிப்பகத்திற்கு வருகை தந்து மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினர். தாங்கள் காவல் துறையில் சேர எடுத்துக் கொண்ட முயற்சி, அவரவர் பாதுகாப்பிற்கு கற்றுக் கொள்ள வேண்டிய தற்காப்பு கலை, பெற்றோருக்கு மரியாதை செலுத்துவது உள்ளிட்டைவைகளை எடுத்துக்கூறினர்.
மேலும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் மன ரீதியான தொந்தரவுகள், இதர பிரச்சனைகளை தயக்கமின்றி தங்களிடம் தெரிவிக்கலாம் எனவும், பிரச்சனைகளை கண்டு பயப்படாமல் தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினர். இதில் கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் மற்றும் படிப்பக ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *