அண்ணாமலை மீதான வழக்கை வாபஸ் பெற்றார் டி.ஆர்.பாலு
1 min read
T.R. Baalu withdrew the case against Annamalai.
30.6.2026
தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த அண்ணாமலை 2023-ம் ஆண்டில் ‘டி.எம்.கே. பைல்ஸ்’ என்ற பெயரில், பலரின் சொத்து பட்டியலை வெளியிட்டார்.
அப்போது அவர் தி.மு.க. பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலு சொத்து விவரங்கள் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.
இதையடுத்து அண்ணாமலை மீது டி.ஆர். பாலு சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, டி.ஆர். பாலுவிடம், அண்ணாமலையே குறுக்கு விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மறுமுறை வழக்கு வரும்போது, மீண்டும் டி.ஆர்.பாலுவிடம் குறுக்கு விசாரணை செய்யப்போவதாக அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அண்ணாமலை மீதான வழக்கை டி.ஆர்.பாலு வாபஸ் பெற்றார்.
தமிழகத்தில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு உள்ளது. அண்ணாமலையும் பா.ஜ.க.வில் இருந்து விலகி வி தி லீடர்ஸ் என்ற இயக்கத்தினை ஆரம்பித்துள்ளார்.
மாறியுள்ள அரசியல் சூழல் கருதி இந்த முடிவினை டி.ஆர் பாலு எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.