July 15, 2026

Seithi Saral

Tamil News Channel

பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை

1 min read

Chief Minister Vijay pays tribute to the statue of Perunthalaivar Kamarajar.

15.7.2026
பெருந்தலைவர் காமராஜரின் 124-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது திருவுருவச் சிலைக்கு முதல்வர் ஜோசப் விஜய் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நாடு முழுவதும் முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் 124-ஆவது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழ்நாடு முழுவதும் காமராஜரின் திருவுருவச் சிலை மற்றும் உருவப் படத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், வணிகர்கள், மக்கள் என ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில், தமிழ்நாடு முதல்வர் ச.ஜோசப் விஜய், பெருந்தலைவர் காமராஜரின் 124-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (ஜூலை 15) சென்னை, அண்ணா சாலை, பல்லவன் இல்லம் எதிரில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அவரைத் தொடர்ந்து சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என்.ஆனந்த், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் கோ.க. அருண்ராஜ், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப.வெங்கடரமணன், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம். ஷாஜகான், நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் நெ.மரிய வில்சன், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் ரா.குமார், மாநிலங்களவை உறுப்பினர் திரு. பிரவீன் சக்கரவர்த்தி, சட்டப்பேரவை உறுப்பினர்கள், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு.அ.அருண் தம்புராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *