ஆலங்குளம் அருகே இருவர் குண்டர் சட்டத்தில் கைது
1 min read
Two arrested under the Goondas Act near Alangulam.
16.7.2026
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூ ரைச் சேர்ந்த மாடக்கண்ணு என்பவரது மகன் சண்முகநாதன் என்ற ராஜா (வயது 30), நெல்லை மாவட் டம் அம்பை அருகே யுள்ள பிரம்மதேசத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் நந்து (வயது 24) ஆகியோர் மானூர் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் கடந்த மாதம் 29ம்தேதி கொலை முயற்சி, ஆயதங்களால் தொடர் தாக்குதல், சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட குற்ற வழக்குகளில் ஈடுபட்டு பொது அமைத்திக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பொதுமக்களை அச்சுறுத்தும் செயலில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகள். இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மானூர் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ் ணன், எஸ்பி விஷ்வேஷ் சாஸ்திரி ஆகியோர் பரிந் துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் மோகன் ஆனந்த் உத்தரவின்படி போலீசார் இருவரையும் குண்டாசில் கைது செய்து பாளை மத் திய சிறையில் அடைத்தனர்.
நெல்லை மாவட்டத்தில் இதுவரை 74 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப் பட்டுள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது.