பாகிஸ்தானில் 12 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
1 min read
12 terrorists shot dead in Pakistan
5.9.2026
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் நீண்ட நாட்களாகவே உள்நாட்டுக் கலவரங்களாலும், ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தலாலும் தவித்து வருகிறது. இந்நிலையில், அங்குள்ள கலாட் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் பாதுகாப்புப் படையினர் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பிற்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், பலூச் கிளர்ச்சிக் குழுவைச் சேர்ந்த 12 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அவர்களின் ஆயுதக் கிடங்குகளும் அழிக்கப்பட்டன. இதற்கிடையே, பாக் நகரில் உள்ள போலீஸ் நிலையம் மற்றும் அரசு அலுவலகங்களை 40-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் தாக்கி, நகரைக் கைப்பற்ற முயன்றனர். ஆனால், பாதுகாப்புப் படையினரின் 2 மணி நேரக் கடுமையான எதிர்த்தாக்குதலால் பயங்கரவாதிகள் பின்வாங்கி ஓடினர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் போலீசார் உள்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.