October 7, 2026

Seithi Saral

Tamil News Channel

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை திட்டம்- தென்காசி ஆட்சியர் தகவல்

1 min read

Central Government Scholarship Scheme – Information from Tenkasi District Collector

7.10.2020
தென்காசி மாவட்டம் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவ,மாணவியருக்கான மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டம் குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், தகவல் தெரிவித்துள்ளார்.
மத்தி்ய அரசால் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி 2 L (PM YASASVI Top class education in schools for OBC, EBC & DNT students) செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2026-27 ஆம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Schoairship Portal) அறிவிக்கப்பட்டுள்ள (Top Class School) சிறந்த செயல்பாடு கல்வி நிறுவனம் (100% தேர்ச்சி பெற்றுள்ள) பள்ளிகளில் நடப்பாண்டில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் தமிழகத்தைச் தகுதியான மாணவியர்ககள் கல்வி உதவித்தொகை (புதுப்பித்தல் புதியது) திட்டத்தில் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (https://scholarships.gov.in) விண்ணப்பிக்கலாம் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தில் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணமாக ஆண்டொன்றுக்கு அதிகபட்சமாக 9-10 ஆம் வகுப்பு பயில்பவருக்கு ரூ.75,000/-மற்றும் 11-12 ஆம் வகுப்பு பயில்பவருக்கு ரூ.125,000/- வரை உதவித்தொகையாக ஒன்றிய அரசால் வழங்கப்படும். 30% மாணவியர்களுக்கு இத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாணவ,மாணவியர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC). பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் (EBC) அல்லது சீர்மரபினர் (DNT) பிரிவைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.

வருமான வரம்பு குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்

2025-26 ஆம் கல்வியாண்டில் 100% தேர்ச்சி பெற்று தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள பள்ளிகளில் பயில்பவராக இருத்தல் வேண்டும். இவ்வாறு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *