தென்காசி மாவட்ட சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
1 min read
Welfare assistance for members of the Denotified Tribes Welfare Board in Tenkasi District.
7.10.2026
தென்காசி மாவட்டத்தில் சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர் களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள முக்கிய தகவலை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்தில் சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு கீழ்கண்ட நலத்திட்ட உதவிகள் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது
- விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை –
ரூ. 1,25,000/- - இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை – ரூ.30,000/-
- ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை – ரூ. 5,000/-
- கல்வி உதவித்தொகை – ரூ1000 முதல் 8000 வரை
- திருமண உதவித்தொகை
ரூ..3000/- அல்லது 5000/- - மகப்பேறு உதவித்தொகை ரூ.6000/-
- மூக்குக் கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல்
ரூ.750/- - முதியோர் ஓய்வூதியம்
ரூ.1200/- வீதம் (பிரதி மாதம்)
மேற்படி நலத்திட்ட உதவிகள் பெற 1) சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்கள் 2) 18 வயது முதல் 60 வயது நிறைவு பெறாதவர்கள் 3)-அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியும் குடும்பத்தில் ஒருவர் (அமைப்பு சாரா தொழில், நிலமற்ற விவசாய கூலி. உடலுழைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள) இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற தகுதி பெறுகின்றனர்.
மேற்படி நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்தல், புதுப்பித்தல், நலத்திட்ட உதவிகள் பெறுதலை எளிதாக்கும் வகையில் இணையதளம் www.dnewb.tn.gov.in உருவாக்கப்பட்டுள்ளது.
“சீர்மரபினர் நல வாரியத்தில் ஏற்கனவே உறுப்பினராக பதிவு பெற்றவர்களின் விவரம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டியுள்ளதால் தங்களின் சுயவிவரங்களான உறுப்பினர் அடையாள அட்டை நகல், ஆதார் நகல், மொபைல் எண் போன்ற விவரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திற்கு அனுப்பி வைத்திட மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங்,தெரிவித்துள்ளார்.