கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தில் தேசிய அஞ்சல் வாரம்-கண்காட்சி
1 min read
National Postal Week at Kovilpatti Head Post Office
12.10.2026
தேசிய அஞ்சல் வார கொண்டாட்டங்கள் அனைத்து அஞ்சலங்களிலும் கடந்த 09.10.2026 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவ, மாணவியர்கள் , பழைமை வாய்ந்த அஞ்சல் தலைகள் பற்றி தெரிந்து கொள்ளவும், அஞ்சல் தலை சேகரிப்பின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளும் வண்ணம், 12.10.2026 , திங்கட்கிழமை அன்று கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தில், பள்ளி மாணவ மாணவியர்களுக்கு 155 நாடுகளின் அஞ்சல் தலைகள், பழங்காலத்து அரிய வகை புகைப்படங்கள், சுதந்திரத்திற்கு முந்தைய தமிழ் நாளேடுகள், காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சி நடைபெற்றது.
கோவில்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி பள்ளிகளை சேர்ந்த சார்ந்த சுமார் 1000 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அதனை பார்வையிட்டு சென்றனர்.
இந்த அஞ்சல் தலை கண்காட்சியை கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியைச் சார்ந்த, மாணவி ஒருவர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
கண்காட்சியின் போது அஞ்சல் தலை சேகரிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி மாணவ மாணவியர்களுக்கு கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செ. சுரேஷ்குமார் விரிவாக எடுத்து கூறினார். அஞ்சல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கண்காட்சியை பள்ளி மாணவ மாணவியர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். மேலும் அவர்கள் இந்த கண்காட்சி தங்களுக்கு பெரிது பயனுள்ளதாக அமைந்திருந்ததாக கருத்து தெரிவித்தனர்.