தென்காசி: மக்கள் குறை களையும் நாள் கூட்டம். ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
1 min read
Tenkasi: Public Grievance Redressal Day meeting held under the chairmanship of the District Collector.
12/10/2026
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (12:10:2026) மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், தலைமையில் திங்கள் கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் நடைபெற்றது.
பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி தொழில் கடனுதவி. முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை. வேலைவாய்ப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 422 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், அறிவுறுத்தினார்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் கடந்த திங்கள் கிழமை அன்று பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் தற்போதைய நிலை குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
ஊரக வளர்ச்சி முகமை இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.வீராசாமி, தென்காசி சார் ஆட்சியர் வைஷ்ணவி பால், திட்ட இயக்குநர் மாவட்ட முனைவர்.ஆ.ரா.சிவராமன், மாவட்ட வழங்கல் அலுவலர் செல்லத்துரை, தனித்துணை ஆட்சியர் ராஜேந்திரன் மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.