October 20, 2026

Seithi Saral

Tamil News Channel

தோரணமலை முருகன் கோவிலில் வேல்வழிபாடு

1 min read

Veli worship at the Thoranamalai Murugan Temple

20.10.2026
தோரணமலை முருகன் கோவிலில் நடைபெற்ற வேல்வழிபாடு, மணி ஓசை பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை ஸ்ரீமுருகன் கோவிலில் ஐப்பசி மாத பிறப்பையொட்டி அதிகாலையில் 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, உற்சவருக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அடிவாரத்தில் ஸ்ரீவிருட்சராஜ பூஜை, சப்த கன்னியர், கன்னிமாரம்மன், சுனை நீர் பூஜை, 27 நட்சத்திர மரக்கன்றுகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து வேல் பூஜை நடைபெற்றது. இதையொட்டி வைக்கப்பட்டிருந்த வேல்களுக்கு பக்தர்கள் சந்தணம், குங்குமம் வைத்து வழிபட்டனர். வேல்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. மேலும் மணி ஓசை பூஜையும் நடைபெற்றது.

மேலும் சர்க்கரை பொங்கலிட்டு, சூரிய வழிபாடு நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் காலை, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான
ஏற்பாடுகளை தோரணமலை முருகன் கோவில் பரபம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *