October 31, 2026

Seithi Saral

Tamil News Channel

என்.வி.எஸ்-03 செயற்கை கோளின் சிறப்பம்சம்- இஸ்ரோ தலைவர் விளக்கம்

1 min read

What are the key features of the NVS-03 satellite? ISRO Chairman explains

31.10.2026
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன வழிகாட்டுதல் செயற்கைக்கோளான ‘என்.வி.எஸ் – 03’ செயற்கைக் கோளை சுமந்துகொண்டு, ஜி.எஸ்.எல்.வி – எப்18 ராக்கெட், நேற்று இரவு 11.51 மணிக்கு, விண்ணில் வெற்றிகரமாகச் சீறிப்பாய்ந்தது. திட்டமிட்டபடி பயணித்த செயற்கைக்கோள், நிர்ணயிக்கப்பட்ட புவி வட்டப்பாதையில் மிகத் துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டது.
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறியதாவது:-

திட்டமிட்ட இலக்கில் நிலைநிறுத்தியதன் மூலம் இந்தியாவின் உள்நாட்டு வழிகாட்டுதல் சேவைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலும், நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் சுமார் 1,500 கிலோமீட்டர் வரையிலான பகுதிகளிலும் சேவைகளை வழங்கும் வகையில் என்.வி.எஸ்-03 செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. சாலைப் போக்குவரத்து, கடல்சார் செயல்பாடுகள், அவசரகால உதவிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த செயற்கைக்கோள் வழிகாட்டுதல் சேவைகளுக்கு முக்கியப் பங்கு வகிக்கும்.

இந்த ஏவுதல் வெற்றியடைந்த நிலையில் ஓரிரு நாட்களில் இந்த செயற்கைக்கோள் செயல்பாட்டுக்கு வரும். தற்போது, ஜி.எஸ்.எல்.வி.-எப் 18 ராக்கெட் இந்தச் செயற்கைக்கோளை முதலில் ‘புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில்’ செலுத்தியுள்ளது. அதன்பின்னர், செயற்கைக் கோளில் உள்ள சொந்த என்ஜின்கள் இயக்கப்பட்டு, அது தனது இறுதி இலக்கான புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையில் குறிப்பிட்ட நிலைக்கு 32.5 டிகிரி கிழக்கு /111.75 டிகிரி கிழக்கு) கொண்டு செல்லப்படும். அதற்கு பிறகு இந்தியாவின் உள் நாட்டு செயற்கைக்கோள் வழிகாட்டுதல் கட்டமைப்பை மேம்படுத்துவதில் முக்கிய முன்னேற்றமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *