November 24, 2026

Seithi Saral

Tamil News Channel

சங்கரன்கோவில்: சாட்சியை மிரட்டியவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது

1 min read

Sankarankovil: Man who threatened a witness arrested under the Goondas Act

22.11.2026
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தனம் மீது உள்ள வழக்கில் சாட்சி சொல்ல வரக்கூடாது என்று மிரட்டிய நபரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்

சங்கரன்கோவில் காந்தி தெருவை சேர்ந்த மதியழகன் என்பவரை சங்கரன்கோவிலை சேர்ந்த ஆண்டனி மகன் வைகுண்டராஜ் என்பவர் தன் மீது உள்ள வழக்கில் சாட்சி சொல்ல கூடாது என்றும் வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.

அதற்கு மதியழகன் வழக்கை நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னவுடன் வைகுண்டராஜ் , மதியழகனுக்கு சாட்சி சொல்லக்கூடாது என்று கொலை மிரட்டல் விடுத்த நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அதன் தொடர்ச்சியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சியாளர் மோனிகா ரானா உத்தரவின் படி சங்கரன்கோவில் காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் போலீசார் வைகுண்டராஜை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *