April 29, 2024

Seithi Saral

Tamil News Channel

கைதி இந்தி ரீமேக்கில் அஜய் தேவ்கான்

1 min read
Ajay Devgan in ‘Kaithi’ Hindi remake

25.2.2020

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் கைதி. இப்படத்தினை ஹிந்தி ரீமேக் எடுக்கப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.

கைதி படம் எந்த ஒரு காதல் காட்சிகளும் இல்லாமல் மிகவும் தத்துரூபமாக எடுக்கப்பட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தளபதி விஜயுடன் மாஸ்டர் படத்தில் கைகோர்ப்பதற்கு மிக பெரிய வாய்ப்பு கிடைத்தது.

கைதி படம் உலக அளவில் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் நல்ல வசூலையும் ஈட்டியது.  பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்ததால் ஹிந்தியில் ரீமேக் செய்யப்போவதாக தெரிவித்துள்ளனர். இதில் கார்த்தி கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கான் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னதாக சூர்யா நடிப்பில் வெளிவந்த சிங்கம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவ்கான்  நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல பாலிவுட் நடிகர்கள் கைதி படத்தை பார்த்து ரீமேக்கில் நடிக்க ஆர்வம் காட்டினனர். ஆனால் அண்ணன் படத்தில் நடித்த அஜய்தேவ்கான் தற்போது தம்பி படத்தையும் ரீமேக் செய்வதற்கு ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.