May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

தனுஷுக்காக தன்னையே மாற்றிக் கொண்ட கேரள நடிகை

1 min read
A self-professed Kerala actress for Dhanush

அனுரக கரிக்கின் வெல்லம் என்ற படத்தின் மூலம் 2016 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் அறிமுகமானவர் ரஜிஷா விஜயன். முதல் படத்திலேயே கேரள மாநில அரசின் சிறந்த நடிகை விருதை பெற்றவர்.

மலையாளத்தில் சிறந்த நடிகையாக வலம் வருபவர் தனுஷ் தனது படங்களில் நடிக்க வைப்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில்தான் பிரேமம் படத்தின் மூலம் பிரபலமான சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டின் போன்ற நடிகைகளுடன் படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அந்த வகையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கர்ணன். இந்த படத்தில் ரஜிஷா விஜயன் என்பவர் தமிழுக்கு அறிமுகமாகிறார்.

தன்னுடைய உருவத்தை மொத்தமாக மாற்றி தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு கர்ணன் படத்திற்காக தன்னை அர்ப்பணித்து உள்ளாராம். படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளிவந்த புகைப்படங்கள் ரஜிஷா விஜயன் என்பவரின் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஒரு படத்திற்காக தன்னை முழுமையாக அர்ப்பணிக்கும் நாயகி ரஜிஷா விஜயன் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்ணன் படம் ஜூன் மாத வெளியீடாக வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.