April 27, 2024

Seithi Saral

Tamil News Channel

அண்ணாத்த, வலிமை படங்கள் எப்போது வெளியாகும்?

1 min read

When releced Anatha and Valimai

1-7-2020

ரஜினியின் அண்ணாத்த படத்தை தீபாவளி அன்று வெளியிட முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

படப்பிடிப்பு நிறுத்தம்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்தியா முழுவதும் சினிமா படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு உள்ளது. வெளிவரும் நிலையில் உள்ள புதிய படங்களும் வெளிவரவில்லை.

மராட்டிய அரசு வயதான நடிகர்கள் தொழில் நுட்ப கலைஞர்களை தவிர்த்து விட்டு இளைஞர்களை வதை்து படப்பிடிப்பை நடத்தலாம் என்று அறிவித்து உள்ளது. ஆனால் இந்தி திரையுலகில் இயக்குனர்கள் பலரும் வயதானவர்கள் என்பதால் இந்த நிபந்தனையை இந்தி திரையுலகம் ஏற்கவில்லை. இதுபோல் ஆந்திரா, தெலுங்கானாவில் படப்பிடிப்புகளை நடத்த அனுமதி அளித்தும் கொரோனா அச்சுறுத்தலால் நடிகர்-நடிகைகள் படப்பிடிப்புக்கு செல்ல மறுத்து விட்டனர்.

அண்ணாத்த, வலிமை

தமிழ் திரையுலகை பொறுத்தவரை ரஜினிகாந்தின் அண்ணாத்த, அஜித்குமாரின் வலிமை படப்பிடிப்புகள் கொரோனாவால் முடங்கி உள்ளன. ஐதராபாத்தில் அண்ணாத்த படத்தின் பாதி படப்பிடிப்பை முடித்து விட்டனர். மீதி படத்தையும் முடித்து அக்டோபர் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டனர். கொரோனாவால் படத்தின் ரிலீசை தள்ளி வைத்து பொங்கலுக்கு வெளியாகும் என்று பட நிறுவனம் அறிவித்தது.

ஆனால் பொங்கலுக்கும் அந்தப் படத்தை வெளியிட வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது கொரோனா முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பிறகே ரஜினிகாந்த் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

அஜித்தின் வலிமை படப்பிடிப்பும் 50 சதவீதம் முடிந்துள்ளது. இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு மேலும் தள்ளிப்போகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.