June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆன்-லைன் மூலம் பாடம் படிக்க மாணவிக்கு ஐபோன் வாங்கி கொடுத்த நடிகை டாப்சி

1 min read


Actress Topsy bought an iPhone for a student to study online

2-8-2020

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பல பள்ளிக்கூடங்களில் ஆன்-லைன் மூலம் பாடம் நடத்தப்படுகிறது. ஆனால் சில ஏழை மாணவ-மாணவிகளுக்கு நவீன செல்போன் இல்லாமல் தவிக்கிறார்கள்.

இந்த நிலையில் நடிகை டாப்சி செல்போன் இல்லாமல் தவித்த ஒரு மாணவிக்கு உதவி செய்து இருக்கிறார். இவர் ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா–2, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்போது அவர் பாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்துகிறார்.

இந்த நிலையில் நடிகை டாப்சி, ஆன்லைன் வகுப்புக்காக போன் இல்லாமல் தவித்த ஏழை மாணவி ஒருவருக்கு ஐபோன் வாங்கி கொடுத்து உதவி செய்திருக்கிறார்.
அந்த மாணவி கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். 12ம் வகுப்பு தேர்வில் 96 சதவீத மதிப்பெண்களை எடுத்துள்ளார். மேலும், அவர் நீட் தேர்விற்கும் படித்து வருகிறார். அதற்கான கல்வி கட்டணத்தை அவரது தந்தை கடன் வாங்கியும், நகைகளையும் விற்றும் கட்டியுள்ளார்.
அந்த மாணவி தற்போது ஆன்லைன் வகுப்பில் படிக்க ஸ்மார்ட்போன் இல்லாமல் தவித்தார். இந்த செய்தி வெளியானது. இதை பார்த்த நடிகை டாப்சி அந்த மாணவிக்கு புதிய ஐபோன் ஒன்றை வாங்கி அனுப்பி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *