June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

புதிய தொழிலில் கால் பதிக்கும் ஹன்சிகா

1 min read


Hansika stepping foot in new business

24-8-2020

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா. மிக மிக அழகான நடிகைகளில் இவரும் ஒருவர். இவர் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு என பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நாயகி ஆனார்.

இவர் தற்போது `மஹா’ என்ற படத்தில் நடிக்கிறார். இந்த்ப்படம் ஹன்சிகாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதை. இது அவரது 50-வது படம் ஆகும். இந்தப் படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது.

இந்தப் படத்திற்கு பிறகு அவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் இல்லை.

புதிய தொழில்

இந்த நிலையில், நடிகை ஹன்சிகா புதிய தொழிலில் கால் பதித்து உள்ளார். அவர் ‘தி பலூன் ஸ்டைலிஸ்ட்ஸ்’ என்ற புதிய நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். கல்யாணம் உள்ளிட்ட வீட்டு விசேஷங்களுக்காக பலூன் மூலம் விதவிதமான அலங்காரங்களைச் செய்வதுதான் அந்த நிறுவனத்தின் பணியாம்.

அது பற்றி தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களிலும் ஹன்சிகா பதிவிட்டுள்ளார். ஹன்சிகா கொரோனா ஊரடங்கு காலத்தில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து இருந்தார். தற்போது புதிய தொழில் தொடங்கி உள்ளார். பட வாய்ப்புகள் குறைந்து வருவதால் அவர் மற்ற தொழில்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டாதாக சினிமா உலகத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *