நடிகை வனிதாவின் புதிய கணவருக்கு நெஞ்சுவலி
1 min read
Chest pain for actress Vanitha’s 3rd husband
நடிகை வனிதாவின் புதிய கணவருக்கு நெஞ்சுவலி
25-8-2020
நடிகை வனிதாவின் புதிய கணவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. அவர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
நடிகை வனிதா
நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. நடிகையான இவர் ஏற்கனவே 2 பேரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்து கொண்டார்.
பீட்டர் பாலுக்கும் ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தையும் உள்ளனர். முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்ததால் சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
நெஞ்சுவலி
இந்த நிலையில் வனிதாவின் கணவர் பீட்டர் பாலுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.