September 18, 2024

Seithi Saral

Tamil News Channel

கும்பம் / ராகு-பெயர்ச்சி பலன்கள் / காழியூர் நாராயணன்

1 min read


Ragu-kethu peyarchi palan / Aquarius / Kaliyur Narayanan

1-9-2020

மதிப்பும், மரியாதையோடு வாழ விரும்பும் கும்ப ராசி நண்பர்களே! பிறரின் சிறுகுறைகளை கூடநீங்கள் பொறுக்க மாட்டீர்கள். பிறர் உங்களை பெருமையாக பேசவே விரும்புவீர்கள். பிறர் உதவியை நாடாமல் முன்னேற நினைப்பவர்கள்.பெண்களின் அன்பை எளிதில் பெற்று விடுவீர்கள். இந்த ராகு-கேது பெயர்ச்சி உங்களுக்கு சுமாரான பலனை தந்தாலும் ராகுவின் பின்னோக்கிய11-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 6-ம் இடமான கடகத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும்.இதன்மூலம் முயற்சிகளில் வெற்றியை தருவார். உங்கள் ஆற்றல் மேம்படும். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெறுவீர்கள்.
ராகு இதுவரை 5-ம் இடமான மிதுன ராசியில் இருந்து குடும்பத்தில் பிரச்சினையை தந்து கொண்டிருந்தார். இப்போது அவர் 4-ம் இடமான ரிஷபத்திற்கு வருவதால் அந்த பிரச்சினை மறையும். அதே நேரம் இந்த இடமும் ராகுவுக்கு சாதகமானது அல்ல என்பதால் அலைச்சலையும், சிற்சில பிரச்சினையையும் உருவாக்கலாம்.
கேது இதுவரை உங்கள் ராசிக்கு11-ம் இடமான தனுசு ராசியில் இருந்து பல்வேறு நன்மைகளை தந்து கொண்டிருந்தார். குறிப்பாக நல்ல சுகத்தை- யும், பொருளாதார வளத்தையும் தந்திருப்பார்.அவர் இப்போது 10-ம் இடமான விருச்சிகத்திற்கு செல்கிறார். இது சிறப்பானது என்று சொல்ல முடியாது. இங்கும் அவர் உடல் உபாதைகளை தரலாம். ஆனால் கேது பிற்பகுதியில் காரிய அனுகூலத்தைப் கொடுப்பார்.
தடைகளை முறியடிக்கும் பார்வை
ராகு சாதமகற்ற இடத்தில் இருந்தாலும் அவரது பின்னோக்கிய11-ம் இடத்துப்பார்வையால்உங்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இதனால் எந்த தடைகளையும் நீங்கள் முறியடித்து வெற்றி காண்பீர்கள். உங்களையும் அறியாமல் உங்கள் ஆற்றல் வெளிப்பட்டு கொண்டு இருக்கும். அதனை கண்டு பகைவர்களும் அஞ்சும் நிலை உருவாகும். பண வரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம்.


மற்றகிரகங்களின் நிலை


சனிபகவான் இப்போது உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் இருக்கிறார். இது சாகதமான இடம். பல்வேறு நன்மைகளை தருவார். அவரால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும்,ஆனந்தமும் அதிகரிக்கும்.பெண்களால் முன்னேற்றம் காணலாம்.ஆனால் சனிபகவான்2020 டிசம்பர் 26-ந் தேதி 12-ம் இடமான மகரராசிக்கு வருகிறார். இனிமேல் அவரால் முன்புபோல் நற்பலனை கொடுக்க முடியாது. இது உங்களுக்கு ஏழரை சனி ஆரம்ப காலம். பொருளாதார இழப்பு வரலாம். வெளியூர் பயணம் ஏற்படும். எதிரி- களின் இடையூறு அவ்வப்போது வரலாம். இதனால் நீங்கள் அஞ்ச வேண்டாம். காரணம் சனியின்7-ம் இடத்து பார்வை கடகத்தில் விழுகிறது. இது சிறப்பான இடம். இதன் மூலம் அவர் நல்ல பொருளாதார வளத்தை கொடுப்பார். பகைவர்களை எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். முயற்சிகளில் வெற்றியை தருவார். உங்கள் ஆற்றல் மேபடும்.
குருபகவான் 11-ம் இடமான தனுசு ராசியில் இருக்கிறார். இது மிகவும் சிறப்பான இடம் ஆகும். அவர் பலவிதத்தில் வெற்றியை தந்து பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணச்செய்வார். மேலும் அவரின்7 மற்றும் 9-ம் இடத்து பார்வைகள் சிறப்பாக அமைந்துள்ளது. அதன் மூலமும் பல்வேறு நன்மைகள் பெறலாம். ஆனால் அவர்2020 நவம்பர் 15-ந் தேதி பெயர்ச்சி அடைந்து 12-ம் இடமான மகர ராசிக்கு மாறுகிறார். இது சுமாரன இடம். அப்போது அவரால் பொருள் நாசம் ஏற்படும். பல்வேறு தொல்லைகள் உருவாகும். மனதில் நீங்காத வருத்தம் உருவாகும். வீண் அலைச்சல் ஏற்படும். ஆனால் அவர்ஏப்ரல் 4-ந் தேதி முதல் செப்டம்பர் 13-ந் தேதி வரை அதிசாரம் பெற்று உங்கள் ராசியில் இருக்கிறார்.அவர்2021 நவம்பர் 14-ந் தேதி முழு பெயர்ச்சி அடைந்து உங்கள் ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் இல்லை. அவரால் குடும்பத்தில் சிற்சிலபிரச்சினை வரலாம். மனக்கவலை ஏற்படும்.சுறுசுறுப்பு அற்ற நிலை, இருப்பிட மாற்றம் முதலியன ஏற்படலாம்.அதற்காக கவலைகொள்ள தேவை இல்லை காரணம். குருவின் அனைத்து பார்வைகளும் சிறப்பாக அமைந்து உள்ளதால் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம். அதன்பிறகு 2022 ஏப்ரல் 14-ந் தேதி பெயர்ச்சி அடைந்து 2-ம் இடமான மீன ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம்.அவரால் உங்களது ஆற்றல் மேம்படும். இதுவரை இருந்த மந்தநிலை மாறும். துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம்.பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும்.
இனி விரிவான பலனை காணலாம்.


2020 செப்டம்பர் முதல் 2020 டிசம்பர் வரை


குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். நவம்பர் 14-ந் தேதி வரை முன்னேற்றமான சம்பவங்கள் நடக்கும்.பொருள் சேரும்.கணவன்- மனைவி இடையே அன்பு இருக்கும். வீட்டிற்கு தேவையான வசதிகள் கிடைக்கும். அதன்பிறகு. குழப்பம் நிலவும். மனக்கவலை ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும் வெளியூர் வாசம் நிகழும். பொருட்கள் திருட்டுபோக வாய்ப்பு உண்டு. சற்று கவனம் தேவை. வீண்விவாதங் -களை தவிர்க்கவும்.
உத்தியோகத்தில் மதிப்பு அதிகரிக்கும். பதவி உயர்வுகாண்பர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.நவம்பர் 14-ந் தேதிக்கு பிறகு மேல் அதிகாரி களிடம் அனுசரித்து போகவும். சிலருக்கு எதிர்பாராத வகையில் மாற்றம் ஏற்படலாம். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.நவம்பர் 14-ந் தேதிக்கு பிறகு அதிகமாக உழைக்க வேண்டும். புதிய வியாபாரத்தை தவிர்ப்பது நல்லது. அப்படியே தொழில் தொடங்க நினைப்பவர்கள் குறைந்த முதலீட்டில் ஆரம்பிப்பது நல்லது.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்க பெறுவர். நவம்பர் 14-ந் தேதி க்கு பிறகு விருது, பாராட்டு போன்றவை கைநழுவி போகலாம். அரசியல் வாதிகள்,சமூகநல தொண்டர்கள் பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும்.ஆனால் பணப் புழக்கத்தில் எந்த குறையும் இருக்காது. மாணவர்கள் முயற்சிக்கேற்ற வளர்ச்சி இருக்கும். விவசாயம்: திருப்திகரமான வருவாயை காணலாம். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். தீர்ப்பு உங்கள் பக்கம் அமையலாம். கால்நடை செல்வம் பெருகும். பால்- பண்ணை மூலமும் நல்ல வருவாய் கிடைக்கும்..டிசம்பர் 26-ந் தேதிக்கு பிறகு புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம்.
பெண்கள் துணிச்சல் பிறகும். மகிழ்ச்சியுன் காணப்படுவர்.அக்கம் பக்கத்தினர்களின் தொல்லையில் இருந்து விடுபடுவர்.வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர்.தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூட வாய்ப்பு வரும். நவம்பர் 14-ந் தேதிக்கு பிறகு ஆடம்பர செலவை தவிர்க்கவும். உடல்நலம் உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம்.பயணத்தின் போது கவனம் தேவை.


2021ஜனவரி முதல் 2021நவம்பர் வரை
முக்கியகிரகங்கள் எதுவுமே சாதகமான நிலையில் இல்லை. கணவன்- மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். புதியவீடு, மனை வாங்க அதிக முயற்சி மேற்கொள்ள வேண்டியதிருக்கும். சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு. கவனம் தேவை.
உத்தியோகம் வேலைப்பளு இருக்கும். வேலையில் கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் ஏற்படும்..அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும்..வியாபாரிகள் லாபம் கிடைக்க அதிகமாகஉழைக்க வேண்டியது இருக்கும்.நமக்கு ஏதுஎதிரி என்று அசட்டையாக இருந்து விடாதீர்கள்.மறைமுக பகைவர்களால் அவ்வப்போது இடையூறுகள் வரலாம்.புதிய தொழில் தொடங்க அதிக பணம் போட வேண்டாம். பணமுதலீட்டைவிட அறிவு மூதலீட்டை போட்டு தொழில் ஆரம்பிக்க வேண்டும். பொருள்விரயம், பணமாயம் போன்றவை நிகழலாம்.குடும்ப பிரச்சினையை மறந்து தொழில் செய்து வந்தால் நல்ல முன்னேற்றம் காணலாம்.
கலைஞர்களுக்கு ஏப்ரல் 4-ந் தேதி முதல் செப்டம்பர் 13-ந் தேதி வரை குருவின் பார்வையால் புகழ்பாராட்டு கிடைக்கும். பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் மறையும். மற்றும் அதே பெண்கள் தவறை உணர்ந்து உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். அரசியல்வாதிகள்,சமூகநல சேவகர்கள் எதிர்பார்த்த பலனை பெற முடியாது. மாணவர்களுக்கு மனதில் தளர்ச்சி ஏற்படும். ஏப்ரல் 4-ந் தேதி முதல் செப்டம்பர்13-ந் தேதிவரை சிறப்பான பலனை பெறுவர். நல்லமதிப்பெண் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறலாம்.விவசாயிகளுக்கு ஓரளவு மகசூல் கிடைக்கும். வழக்கு, விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.
பெண்கள் குடும்பத்தில் உங்களின் அனுகுமுறைகண்டிப்பாக தேவைபடும். வெளியில் பலவேறு விஷயங்களில் பெருமையாக பேசப்பட்டாலும் வீட்டில் விட்டுக்கொடுத்து போவது நல்லது. இல்லையென்றால் வீண்மன உளைச்- சலுக்கு ஆளாவீர்கள். ஏப்ரல் 4-ந் தேதி முதல் செப்டம்பர் 13-ந் தேதி வரை குரு சுபநிகழ்ச்சியை தருவார். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். சுயதொழில் செய்துவரும் பெண்களுக்கு வங்கிகடன் எளிதாக கிடைக்கும். உடல் நலம் கேதுவால் உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம்.


2021 டிசம்பர் முதல்
குருவால் கலகம் விரோதம் வரும். மந்த நிலை ஏற்படும். குடும்பத்தில் ஒவ்வொருவரும் விட்டுக் கொடுத்து போகவும். ஆனால் குருபகவானின் பார்வையால் வீட்டுக்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்கலாம் வாகன சுகம் ஏற்படும். வசதியான வீட்டுக்கு குடிபுகுவர்.அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். காரிய அனுகூலம் எளிதாகும்.
உத்தியோகம் உங்கள் வேலையை அடுத்தவரிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. வேலைப் பளு இருக்கும். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்துசெல்ல நேரிடலாம். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். வியாபாரத்தில் முன்னேற்றத்துக்கான வழிவகையை தேடவேண்டும். பண விஷயத்தில் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். இருப்பினும் குருவின் 5-ம் இடத்துப் பார்வையால் பணப்புழக்கம் அதிகரிக்கும். பெண்களால் மேன்மை கிடைக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் அடையும்.
கலைஞர்களுக்கு முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும். பொதுநல சேவகர்கள்,அரசியல்வாதிகள் பதவியை எதிர்பாராமல் பாடுபட வேண்டிய- திருக்கும். மாணவர்கள் சற்று முயற்சி எடுத்தால் விரும்பிய பாடங்களை பெறுவர். குருபார்வையால் ஆசிரியர்களிடம் நற்பெயர் கிடைக்கும். காலர்ஷிப் போன்றவை கிடைக்கும். விவசாயம் நெல், கொண்டை கடலை, கேழ்வரகு போன்ற தானியங்கள் சிறப்பான மகசூலை கொடுக்கும். ஆடு, கோழி, பசு வகையில் நல்ல வருமானத்தை பெறுவர்.
பெண்களுக்கு குரு பார்வைபலத்தால் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்திவைப்பார். தோழிகள் உதவிகரமாக இருப்பர். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். பிள்ளை களால் பெருமை கிடைக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். இதுவரை இருந்து வந்த பயணப்பீதி மறையும்.
பரிகாரம்- ராகுகால பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள்.நாக தேவதையை வணங்கி வாருங்கள். பத்திரகாளி அம்மனை தொடர்ந்து வணங்கி வாருங்கள். திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்யுங்கள். ஊனமுற்ற மற்றும் ஏழைகுழந்தைகள் படிக்க இயன்ற உதவியை செய்யலாம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.