May 2, 2024

Seithi Saral

Tamil News Channel

பாரதி (முல்லை குமார்

1 min read

Bharathi ( Mulai kumar – Thabhasu kumar)

13-9-2020

எட்டையபுரம் தந்த தேசிய கவி

எரி மலை குழம்பில் பூத்த அக்னி பூ

பறங்கியரை பயமுறுத்திய பகலவன்

முறுக்கு மீ சையால்

எதிாிகளை கலக்கிய முண்டாசு கவிஞா்

மன்னரை பாடி

மாளிகையில் வாழவில்லை

பாரத நாட்டின் விடுதலைக்காக
உாி மை முழக்கமிட்டு

ஏழ்மையாக வாழ்ந்தாா்

அன்னியரை எதிா்க்க
அச்சம் தவிா்க்க சொன்னாா்

ஆங்கி லேயரை விரட்ட
புரட்சி பாட்டு சொன்னாா்

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்றாா்

ஒருமை பாட்டுக்கு

பல வ ழிகள் சொன்னாா்

ஓடி விளையாடு பாப்பா என்றார்

ஓங்கி குரல் கொடுக்க
உற்சாகம் தந்தாா்
பெண்கள் விடுதலைக்கு முழக்கமிட்டாா்

பாஞ்சாலி சபதம் என்ற காவியம் படைத்தார்
சிங்கள தீவினுக்கோர் பாலம் அ மைக்க சொன்னாா்

சேதுவை மேடுறுத்தி வீதி அ மைக்க சொன்னாா்

சுதந்திரம் கி டைக்கும் முன்னே
ஆனந்த சுதந்திரம்
அடைந்து விட்டோம் என்று பாடி மகிழ்ந்தார்

அவா் ஒரு தீா்க்க தாிசி

அயல் நாட்டவாின் சிம்ம சொப்பனம்

காக்கை குருவி எங்கள் ஜாதி என்றாா் பாரதி, ஆனால்

தன்னை கூறவில்லை என்ற கோபத்தால் மிரண்டதோ பாா்த்த சாரதி கோவில் யானை

பாரதி எழுதிய நூல்களின் எண்ணிக்கை அதிகம்

அவரது இறுதி ஊா்வலத்துக்கு வந்தவா்கள் எண்ணிக்கை மிக,மிக குறைவு

நாட்டுக்காக உ ழைத்த
அந்த நல்லவருக்காக வந்த அந்த நாலு பேருக்கு நன்றி

-முல்லை குமார் என்ற தபசுகுமார்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.