June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

நடிகைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வில்லன் நடிகர் கைது

1 min read

The villain actor who sexually harassed the actress has been arrested

3/11/2020

நடிகைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வில்லன் நடிகர் கைது செய்யப்பட்டார்.

பாலியல் தொந்தரவு

சிவகார்த்திகேயன் நடித்து வெளியான “காக்கி சட்டை” என்ற படத்தில் வில்லனாக நடித்த விஜய் ராஸ். 57 வயதான இவர் இந்தி திரையுலகில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். “க்யா தில்லி க்யா லாகூர்” என்ற படத்தை இயக்கியும் இருக்கிறார்.

நடிகர் விஜய் ராஸ், தற்போது ‘ஷெர்னி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் வித்யா பாலன் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பிலேயே விஜய்ராஸ் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது.

கைது

இதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து மராட்டிய போலீசார் விஜய் ராசை கைது செய்தனர். பின்னர், விஜய் ராஸ் ராம்நகர் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *